க முதல் கௌ வரை
கண்ணேஉன் கண்களிலே காந்தம் கண்டேன்
கார்குழலின் அசைவினிலே காற்றை கண்டேன்
கிளிபோலும் பேச்சினிலே மழலை கண்டேன்
கீழுதட்டு சிரிப்பினிலே இனிமை கண்டேன்
குழிவிழுமுன் கன்னமதில் தேனை கண்டேன்
கூரியஉன் பார்வையிலே தெளிவை கண்டேன்
கெண்டைபோல் கண்களிலே மீனை கண்டேன்
கேள்விக்குறி செவியினிலே செம்மை கண்டேன்
கைவிரலின் நகங்களிலே வெண்மை கண்டேன்
கொண்டையிட்ட தலையினிலே மலரை கண்டேன்
கோபுரக்கலசமதை நெஞ்சில் கண்டேன்
கௌவுகின்ற இதழ்களிலே செம்மை கண்டேன்
கண்ணேஉன் கண்களிலே காந்தம் கண்டேன்
கார்குழலின் அசைவினிலே காற்றை கண்டேன்
கிளிபோலும் பேச்சினிலே மழலை கண்டேன்
கீழுதட்டு சிரிப்பினிலே இனிமை கண்டேன்
குழிவிழுமுன் கன்னமதில் தேனை கண்டேன்
கூரியஉன் பார்வையிலே தெளிவை கண்டேன்
கெண்டைபோல் கண்களிலே மீனை கண்டேன்
கேள்விக்குறி செவியினிலே செம்மை கண்டேன்
கைவிரலின் நகங்களிலே வெண்மை கண்டேன்
கொண்டையிட்ட தலையினிலே மலரை கண்டேன்
கோபுரக்கலசமதை நெஞ்சில் கண்டேன்
கௌவுகின்ற இதழ்களிலே செம்மை கண்டேன்